பசித்தோர்க்கு உணவளித்த ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றிணையம்


ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பங்களில் வாழுகின்ற சுமார் 500 பேருக்கு பகல் போசனபொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகமானவர்கள் தமது நாளாந்த வருமானத்தை இழந்து ஒரு நேர உணவைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் எமது அமைப்பின் முயற்சியால் தனவந்தர்கள் மற்றும் உதவக்கூடிய நள்ளுள்ளங்களின் பங்களிப்பு மற்றும் நிதியை கொண்டு சமைத்த உணவாக முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் சுமார் 500பேருக்குரிய பகல் போசன பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ளவர்களுக்கும் பகல் போசன பொதிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர் சமூக சேவை உத்தியோகத்தர் சம்மேளனத்தின் செயலாளர், ஊடகவியலாளர்கள், பத்திரிகை நிருபர்கள் மற்றும் அமைப்பின் தலைவர், உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்ததோடு நிகழ்வை அமைப்பின் உப செயலாளர் Mr.SMM.கனீபா(JP) தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஏற்பாடுகளைச் செய்வதற்கு உதவிபுரிந்த சகோதரர்களுக்கு அல்லாஹ் அவர்களது வாழ்வில் நிம்மதியையும் தொழிலில் அபிவிருத்தியும் தேக ஆரோக்கியத்தையும் நிறைவான கூலிகளையும் வழங்கி அருள் புரிவானாக ஆமீன்.

பசித்தோருக்கு உணவளிப்போம் எனும் ஏற்பாட்டில் இன்னும் இன்னும் எத்தனை குடும்பங்கள் எமது பகுதிகளில் பசியோடும் கண்ணீரோடும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான மக்களின் துயர் துடைக்க நீங்களும் உங்கள் சதகாக்களை தர்மங்களை எமது ஏறாவூர் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக வழங்கி பொருத்தமான பயனாளிகளுக்கு உதவிடுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :