அஷ்ஷெய்த். அபூபக்கர் அல் அதனி மசூர் மௌலானா அவர்கள் காலமானார்!



வூதி அரேபியா மண்ணில் பிறந்து உலகம் தழுவிய ரீதியில் அறியப்படும் உன்னத மார்க்க அறிஞரும், இஸ்லாமிய கல்வியியலாளருமான அஷ்ஷெய்த். அபூபக்கர் அல் அதனி மசூர் மௌலானா அவர்கள் காலமாகி விட்டார்கள்.
அன்னார் நம் பெரு மதிப்பிற்குரிய அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அப்துல் காதர் மசூர் அவர்களின் பெரிய தந்தையார். சீரிய பண்புகளால் மக்களின் பேரன்பினை வென்றவர்.
இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்திருக்கும் அன்னார், இலங்கை மக்கள் மீது மிகுந்த நேசம் பாராட்டினார்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்வோம்.(ஜனூஸ்)

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் இன்று ஜோர்த்தானில் காலமானார்கள்.
யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாஅலவி சாதாத் வழி முறையில் அல்மஷ்ஹூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
யெமன் நாட்டின் ஏடன் அல்லது அத்ன் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நீண்டகாலமாக வசித்து வந்தார்கள்
செய்ஹ் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் சமகால இஸ்லாமிய பிக்ஹ் துறையில் அறிமுகம் செய்த முக்கிய திருப்பமாக "பிக்ஹ் அல் தஹாவுலாத்"
"மறுமைநாள் பற்றிய சட்டங்கள்" என்ற அம்சம் பிரதானமாகும் நவீன காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதாவது பித்னாக்களுக்கு இஸ்லாமிய வரையறைக்குள் எவ்வாறு தீர்வுகாண்பது என்ற விடயத்தை பல தசாப்தங்களாக ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
பா அலவி சூபி மரபில் தவிர்க்க முடியாத ஒர் ஆளுமையாக அபூபக்ர் அல் மஷ்ஹூர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தோனேசியா மலேசியா யெமன் ஜோர்தான் உட்பட பல இடங்களில் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவியதோடு பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் அவர்கள் நிர்வகித்து வந்தார்கள்.
தனது சொந்த முயற்சியால் யெமனில் தனியான பல்கலைக்கழகம் ஒன்றயைும் செய்ஹ் அபூபக்ர் அல் மஷ்ஹூர் நிறுவியுள்ளார்கள்
பேருவளை ஜாமிஆ நளீமியா சீனன் கோட்டை ஜாமிஆ அல் பாஸிய்யா காலி தலாப்பிட்டி மத்ரஸா அல் முஸ்தபவிய்யா உட்பட பல நிறுவனங்களுக்கு அவர்கள் பல தடவைகள் விஜயம் செய்து அங்கு விரிவுரைகளையும் நடத்தியுள்ளார்கள்
அல்லாஹூத்தஆலா அன்னாரின் சேவைகளை ஏற்று அருள்புரிவானாகவும் ஆமீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :