வாழைச்சேனை ஆயிஷா மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (19) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆயிஷா வித்தியாலய அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் மட்டக்களப்பு சுகாதார சேவை நிலையத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வளவாளர்களாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப் கான், சுகாதார சேவை நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நடாத்தினர்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், பாடசாலை பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, ஆசிரியர் கே.ஆர்.எம்.இர்ஸாத், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர் எம்.எம்.சாதாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், மாணவ சமூகம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்பட்டதுடன், அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பன பற்றி விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :