குப்பைகளினாலும், தூர்வாரப்படாத வடிகான்களினாலும் பாரிய சுகாதார சீர்கேட்டை எதிர்நோக்கும் கல்முனை மாநகர்.



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை மாநகர பிரதேசங்களில் அண்மைக்காலமாக ஒழுங்கான திண்மக்கழிவகற்றல் இன்மை காரணமாக திண்மக்கழிவுகள் அரச மற்றும் தனியார் காரியாலயங்களுக்கு அருகிலும், பாடசாலைகளுக்கு அருகிலும், சந்திகளிலும், நீர்நிலைகள், மைதானங்கள், கடற்கரை ஓரங்கள் போன்ற பிரதேசங்களில் மக்கள் குவித்து வருகின்றனர்.

இதனால் இரவில் கட்டாக்காலி மாடுகளும், தெருநாய்களும் குப்பைகளை கிளறி விடுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மாத்திரமின்றி டெங்கு பரவும் இடங்கள் பல இந்த குப்பை கொட்டப்பட்டுள்ள இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வடிகான்கள் கூட மண்களினால் நிரம்பி நீர் வழிந்தோட முடியாத நிலையில் உள்ளது. சில கான் மூடிகள் நீண்ட காலமாக உடைந்து காணப்படுகின்றது. இதனால் வீதிபோக்குவரத்தும் சில நேரங்களில் தடைப்படுவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். ஒழுங்கான திட்டமிடல்களோ, சரியான திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவமோ இல்லாதமையினால் இந்த நிலை உருவாகியுள்ளது.

மேலும் இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் கல்முனை மாநகர சபைக்கு அறிவித்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த விடயங்களுக்கு பொறுப்பான கல்முனை மாநகர சுகாதாரப்பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரை தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி கேட்டறிந்த போது, குறித்த பிரச்சினையை நானும் என் கண்களினால் கண்டேன். இந்த விடயம் மாநகர சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழுக்காக காண்கிறேன். வடிகான் தூர்வாருதல் போன்றவை பொதுவசதிகள் பிரிவின் கீழ் வருவதனால் அவை ஆணையாளர், பிரதி ஆணையாளர் வசமே உள்ளது. குறைபாடுகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உள்ளது.

எங்களின் சுகாதரப் பிரிவு கடந்த காலங்களில் குறைந்தளவு வளங்களை கொண்டு நிறைவான சேவையை வழங்கி வந்தோம். ஆனால் தற்போது சுகாதரப்பிரிவுக்கான வாகனங்கள் ஆணையாளர் கட்டுப்பாட்டில் இருப்பதனால் தின்மக்கழிவகற்றலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. இதனால் சுகாதரப்பிரிவின் சேவைகள் முடங்கி மந்தகதியிலையே இயங்குகிறது என்று தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபையில் ஆராய்ந்த போது முதல்வர், ஆணையாளர் ஆகியோரே இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களே இவற்றெல்லாம் முடக்கி வைத்துள்ளனர். இதனால் ஏற்படப்போகும் சகல தீமைகளுக்கும் இவர்களே பொறுப்புதாரிகள். இது தொடர்பில் கல்முனை மாநகர உயர் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பும், ஊழலற்ற நிறைவான வளப்பங்கீடும் இருந்தால் இந்த பிரச்சினைகளை அர்ப்பணிப்பு மிக்க மாநகர சுகாதாரப்பிரிவின் ஊழியர் படையணியை கொண்டு முழுமையாக தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :