"வாழ்வதற்கான இல்லறம் "எனும் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஒருங்கமைப்பில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மேலும் இரு வீடுகள் நிர்மாணித்து பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று(30) மன்றத்தின் தலைவர் எம். ரீ் எம். பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்குளம் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வீடுகள் அற்ற இரு குடும்பங்களுக்கு நிரந்த வீடுகள் நிர்மாணித்து வழங்கி வைக்கப்பட்டது. இந்த வீடுகள் நிர்மாணிப்புக்கு ஐக்கிய இராஜியத்தில் வசிக்கின்ற வைத்திய கலாநிதி ஞாணசோதி சுப்பையா அவர்களும் அவுஸ்ரேலியாவில் வசித்த அமரர் குமார சுவாமி அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment