முச்சக்க வண்டி சாரதிகள் போராட்டம்-கல்முனையில் சம்பவம்



பாறுக் ஷிஹான்-
ரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று (7) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆரம்பித்து மாநகர பகுதியினுடாக ஊர்வலமாக சென்று பின்னர் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் தங்களுக்குரிய எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு மகஜர்களை கையளித்துள்ளனர்.
இதன் போது தாம் எரிபொருள் பிரச்சினை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் அத்தியவசிய சேவை என சில துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படுவதாகவும் எமது சேவையும் அத்தியவசிய சேவையின் ஒரு பகுதியாக கருதி எமக்கான எரிபொருளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :