கோட்டா சிங்கபூரில் காலடி வைத்ததும் பதவி துறப்பு கடிதம் வெளியாகும்!



ஆர்.சனத்-
கோட்டா சிங்கபூரில் காலடி வைத்ததும் வெளியாகும் பதவி துறப்பு கடிதம்
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் சாத்தியம்
முன்னேற்பாடாகவே கொழும்பில் ஊரடங்கு
நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

மாலைதீவிலிருந்து சிங்கபூர்நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு சென்றடைந்த பின்னர், ஜனாதிபதியின் பிரதிநிதியால் பதவி விலகல் கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான முன்னேற்பாடாகவே கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென அந்த வரட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர், சர்வக்கட்சி அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :