ஜனாதிபதி கெளரவமாக விலக வேண்டும்!



இல்லாவிட்டால் இரத்தக்களரி ஏற்படும் பயங்கரவாதம் தலைதூக்கும்!
டலஸ் உட்பட 47 அமைச்சர்கள் எம்.பீக்கள் தீர்மானம்!!

பொறுமையாக இருந்து பார்த்தோம் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியால் தீர்வு காண முடியாது பிரச்சினை மிகவும்
முற்றிவிட்டது எனவே மக்கள் கொந்தளிப்பால் நாட்டில் இரத்தக்களரி
ஏற்பட்டுவிடும் பயங்கரவாதம் மீண்டும் உருவாகும் சூழ்நிலைகள் உருவாகலாம் இந்த பயங்கரமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவே ஜனாதிபதி கெளரவமாக பதவி விலக வேண்டும் என அமைச்சர் டலஸ அலகப் பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றிரவு அமைச்சர் டலசின் தலைமையில் கூடிய அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 47 பேர் ஒன்று கூடி நாட்டின் அபாயகரமான நிலைமை
குறித்துக் கலந்துரையாடிய போதே இங்கு கூடிய 47 பேர் ஜனாதிபதி பதவி
விலக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

ஜனாதிபதி பதவி விலகிய பின் பாராளூமன்ற பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவோடு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவாகி அதன்
பின் தேர்தல்களுக்கு முகங்கொடுத்து நிரந்தரமான ஆட்சிக்கு செல்லலாம்
எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :