சம்மாந்துறை வாழ் பொதுமக்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் விடுக்கும் அறிவித்தல்.



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குற்பட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் கிடைக்கப் பெற உள்ளது. எனவே இதனை எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைவாக வாகனங்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கங்களின் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விநியோக நடவடிக்கையின் போது எரிபொருள் நிரப்ப வருகின்றவர்கள் கட்டாயம் தங்களது 2022ம் ஆண்டிற்கான செல்லுபடியாகும். வாகன புகை பரிசேதனைப் பத்திரத்தினை (Emission test Certificate) கொண்டு வரவேண்டும்.

பின்வரும் ஒழுங்கின் பிரகாரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

0,1,2 - செவ்வாய், மற்றும் சனி
3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு
6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி


மேலும் அறுவடை காலம் என்பதால் விவசாயிகளுக்கு தேவையான டீசலினை சிரமம் இல்லாமல் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டினை சம்மாந்துறை பிரதேச செயலகம், கமநல மத்திய நிலையம்,நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே இத்திட்டம் சிறப்பாக இடம்பெற பொது மக்களினதும் சமூக அமைப்புக்களினதும் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்பதாகவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா மக்களிடம் வேண்டுகோள் விடுத்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :