அன்று சமூக நீதி பற்றி பேசிய ரணில்; இன்று மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களை கைது செய்கிறார்.-முஜிபுர் ரஹ்மான்



ணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வறுமையின் ஊடாக வந்த மக்களின் எதிர்ப்பைப் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைத்ததோடு, போராட்டத்தின் நியாயத்தன்மையையும் எடுத்துரைத்தார். பொதுஜன பெரமுனவினால் உருவாக்கப்பட்ட தவறான பொருளாதார நியாய கற்பிதங்கள் மூலம் ஏற்பட்ட ஆவேசத்தினால் மேலேலுந்த ஊந்துதலால் இந்தப் போராட்டம் ஏற்பட்டதோடு, இன்று இதற்காக அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. என்று நேற்று (29) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்து பேசிய விடயங்கள், சமூக பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த உதவியவர்களுக்கு எதிராக அவர் கூறிய விடயங்கள், மக்கள் போராட்டம் நியாயமானது என அவர் கூறிய விடயங்கள், இன்று அவரின் செயற்பாடுகள் சமூகத்தில் கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஏன் இந்த அடக்குமுறை ஏவப்படுகிறது?அன்று சமூக நீதி பற்றி பேசிய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின் மறுபக்கம் திரும்பி மக்களின் உரிமைக்காக வீதியில் இறங்கி மாற்றத்திற்காக போராடியவர்கள்,வறுமை காரணமாக அதன் பீடனையால் பேராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் இன்று அவரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீச்சல் தடாகத்தில் குளித்தவர்களின் பட்டியலும் தயாராகி வருவதாக கேள்விப்பட்டுள்ளோம்.இதில் அரசாங்கம் என்ன விடயத்தை எதிர்பார்க்கிறது? இந்நாட்டு மக்களின் எழுச்சியை அடக்குமுறை மூலம் அடக்கிவிட முடியும் என்று அரசாங்கம் நம்புகிறதா? இந்த வகையில் அரசாங்கம் தனது போக்கை தீர்மானிக்க முற்பட்டால், அரசாங்கம் இந்நாட்டைப் பெரும் பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறான அடக்குமுறை , கட்டுப்பாடுகளால் நசுக்கப்பட்டு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் இலங்கை வரலாற்றில் மக்களின் எழுச்சி நிறுத்தப்பட்ட வரலாறு இல்லை. அந்த விடயங்களை அரசாங்கம் செய்ய முற்பட்டால் இந்நாட்டு இளைஞர்கள் இதை விட மோசமான செயற்பாடுகளுக்கு செல்லலாம்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 50 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்து அரசியலை புரிந்து கொண்ட தலைவராக செயற்படுவார் எனவும் இணக்கப்பாட்டின் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருவார் எனவும் நம்புகின்றோம்.

ஆனால் இன்றைய நிலையில், பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம், அந்த எம்.பி.க்கள் பேசும் மற்றும் செயல்படும் விதம், பாராளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளும் விதம், பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம், கடந்த காலத்தில் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்றிய போது நடந்துகொண்ட விதம் என்பற்றை பார்க்கும் போது கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த போது நடந்து கொண்ட சமூகத்தை அச்சுறுத்திய பாணியிலான போக்கிலையே ரணில் விக்கிரமசிங்கவும் நடந்து கொள்கிறார்.

பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளும் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் இருப்பை தக்க வைக்கும் செயற்பாடுகளையும் பார்க்கும் போது எமக்கு அதில் பிரச்சினை உள்ளதை பார்க்கிறோம்.

இன்று, இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து சர்வதேச பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.பாராளுமன்றத்தில் பெருன்பான்மையை நிலைநாட்டியதில் பிரயோசனம் இல்லை என்றும், இந்நாட்டு மக்களின் ஆதரவின்றி ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளதாகவும்,அதனால்தான் கடன் வழங்கும் நடைமுறையும், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு எட்டுவதற்குமான செயல்முறையில் முன்னேற்றம் ஏற்படாது என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏனெனில் உருவாகியுள்ள அரசாங்கத்தை பார்த்தால் இந்த அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் மக்கள் அங்கீகாரம் இல்லை.பாராளுமன்றத்தில் சில திரிவுபடுத்தப்பட்டு சிதைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ததில் இருந்து கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் வரையும் இன்றும் கூட பாராளுமன்றத்தில் பொதுமக்களின் கருத்து பிரதிபலிக்கப்படவில்லை.ஜனாதிபதியின் பதவி விலகலோடு அந்த இராஜினாமாவுடன் 69 இலட்சம் பேரின் ஆணையும் அங்கு முடிவுக்கு வந்தது.துரதிஷ்டவசமாக இந்த அரசியலமைப்பின் சில சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் அந்த அரசியலமைப்பின் பிரகாரம் எமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்களின் அபிப்பிராயம் அரசாங்கத்திற்கு முற்றுமுழுதாக எதிராக உள்ளது.69 இலட்சம் வழங்கிய மக்கள் ஆணை வலுவிழந்துள்ளது.

அதனால்தான் சர்வதேச சமூகம் ஸ்திரமான அரசாங்கத்தை அமைப்பது மட்டுமன்றி மக்களின் விருப்பமுள்ள அரசாங்கத்தை அமைக்கவும் சொல்கிறது.சலுகைகள் வரப்பிரசாதங்களை வழங்கி உறுப்பினர்களை கழட்டி ஒன்று சேர்த்து பாராளுமன்றத்தில் காட்டும் பெரும்பான்மை ஆதரவு நாட்டு மக்களிடமில்லை.
நாட்டு மக்களிடையே மாறுபட்ட அபிப்பிராயம் நிலவுகிறது.அதனால்தான் பெருன்பான்மை ஆதரவு இல்லாத போக்கினால் பாதுகாப்புத்துறை, இராணுவம், அவசரகாலச் சட்டத்தை பிரயோகித்து மக்களை ஒடுக்க நினைக்கும் அரசாங்கமாக செயற்படுகிறது.

இது ஆபத்தான ஜனநாயக விரோதச் செயலாகும்.அரசியலமைப்புக்கு எதிரான அவசரகாலச் சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நாட்டில் கிளர்ச்சி இல்லை, பயங்கரவாதச் செயல் இல்லை, நாட்டிற்குள் ஆயுத நடமாட்டம் இல்லை. அவசர நிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளனர்.கடந்த அரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாத காரணத்தினால் சிவில் மக்களின் எழுச்சி ஏற்பட்டது உண்மைதான், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்து அடக்கி ஒடுக்குவார்கள் என ஈடுபட்டவர்கள் நம்பவில்லை.

அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களிக்கும் நேரத்தில் வாக்களித்த சிலரைப் பார்த்தோம்.சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்க டொன் ஜுவான் தர்மபாலாவை என அழைத்தவர்கள்,விடுதலை புலிகளுக்கு சார்பானவர் என கூறியவர்கள்,புலனாய்வு பிரிவை காட்டிக் கொடுத்தவர் என கூறியவர்கள் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். தேசபக்தர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் காலில் விழுந்து வணங்கியதையே அன்று பார்த்தோம்.

சொந்த அரசியல் அபிப்பிராயத்தை வைத்துக்கொள்ள முடியாவிட்டால் வீட்டுக்குப் போ, மானத்தை துறத்தல் மிகவும் வருத்தமளிக்கிறது.இன்று பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் தங்கள் மானத்தை துறந்துள்ளனர் என்பது எமக்குத் தெரியும்.

அரசு சொத்துக்களை சேதப்படுத்திய விடயங்கள் பற்றி பேசும்போது 2018 நவம்பரில் பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பொது சொத்துகளுக்கு எவ்வளவு சேதம் விளைவித்தார்கள் என்று பார்த்தோம்.அது குறித்த வழக்குகளை பார்த்தோம்.சபாநாயகர் கமிட்டி நியமிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருந்து பரிந்துரை வந்தது.

பாராளுமன்றத்தின் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது.அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றத்தை சேதப்படுத்தியவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது நீச்சல் தடாகத்தில் குளித்தவர்களை வேட்டையாட வேவு பார்க்கின்றனர்.சோப்பு தடவியவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நாட்டின் உயர்ந்த இடம் பாராளுமன்றம். மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்படாததும்,சேதம் தொடர்பில் தலைவர்கள் தீர்மானம் எடுக்காததும் மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்.மக்கள் அனைவரும் ஒன்றே என நினைக்கின்றனர்.

புரையோடிப்போன இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையை காண்கிறோம்.அரசாங்கம் இப்படி செல்ல ஆரம்பித்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடு இன்னொரு நெருக்கடிக்குள் செல்லலாம் என்று சொல்கிறோம் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :