விவசாயிகளுக்கு டீசல் வினியோகம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் பெறுவதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் தேசபிரியாவின் ஆலோசனைக்கமைய பெற்றோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீலின் மேற்பார்வையில் ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து இன்று சனிக்கிழமை வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவிலிலுள்ள 13 விவசாய கண்டங்களில் இருந்து தலா ஒரு விவசாய கண்டத்தில் இருந்து 10 பேர் வீதம் 130 விவசாயிகளில் ஒருவருக்கு 25 லீற்றர் வீதம் டீசல் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கென வைக்கப்பட்டிருந்த 3307லீற்றர் டீசல் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுரைக்கு அமைய விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

டீசல் விநியோகிக்கும் நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார, வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயகாந்தன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பரிசோதகர் ஏ.பி.எம்.பளீல் ஆகியோர் கலந்து கொண்டு இந்த டீசல் விநியோகத்தை வழங்கி வைத்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுடன் இராணுவத்தினாhரால் விவாசாயிகளுக்கு டீசல் பெறுவதற்கான பாஸ் வழங்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :