எரிபொருள் நெருக்கடியினால் வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வாழ்வாதார உதவி



பாறுக் ஷிஹான்-
ரிபொருள் நெருக்கடி காரணமாக வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன் படி அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வப்ரா முச்சக்கரவண்டி சாரதிகள் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுச்சங்கத்தை சேர்ந்த சாரதிகளுக்கு உலருணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் செவ்வாய்க்கிழமை(5) மாலை வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது இன்று(10) இடம்பெற்ற இந்நிவாரண செயற்பாட்டில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான எம்.எஸ்.எம் ஹாரீஸ் (நவாஸ்)கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இதன் போது சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கணக்காய்வாளர் பி.ரி ஆதம்பாவா ,வப்ரா முச்சக்கரவண்டி சாரதிகள் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுச்சங்க அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம் ராஸிக், செயலாளர் ஜே.எம்.ஹபீல் ,பொருளாளர் வை.எல்.எம் பாறுக், சட்ட ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஐ. ரய்சூல் ஹாதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா மரக்கறி வகைகள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் பல முச்சக்கரவண்டி சாரதி குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :