போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்; சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்!



அஷ்ரஃப் அலீ-
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முகநூல் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் நுவன் போபகே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் போராட்டக்களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விடும் என்றும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறி்ப்பிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் விபரங்களை கேட்டறிய பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும், பாதுகாப்பு செயலாளருக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :