பாதயாத்திரீகளுக்கு குடிநீர் வழங்க நிதியுதவி கோருகிறார் லாகுகலை பிரதேச செயலாளர் நவநீதராஜா



காரைதீவு நிருபர் சகா-
நாளை(22) வெள்ளிக்கிழமை திறக்கப்படும் கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்கும் பாதயாத்திரை அடியார்களுக்கு குடிநீர் மருத்துவ வசதி மற்றும் நலன்புரி விடயங்களை கவனிப்பதற்கென நிதியுதவி வழங்குமாறு லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

வழமையாக அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி இம்முறை இதுவரை கிடையாத காரணத்தினால் பொது அமைப்புகள் தனவந்தர்கள் சமுக சேவையாளரகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக காட்டுப்பாதை திறக்கப்படவில்லை
ஆதலால் இம்முறை நாளை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காட்டுப் பாதை திறக்கப்பட இருக்கின்றது .அதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை அடியார்கள் பயணம் செய்ய இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு வழமையாக அம்பாறை அரசாங்க அதிபரிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி யினால் குறித்த விடையங்களை லாகுகலை பிரதேச செயலகம் செய்து வந்தது தெரிந்ததே. நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை அத்தகைய நிதியை பெற முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே பாதயாத்திரை குழுவினருக்கு இந்த வசதிகளை வழங்குவதற்காக பொது அமைப்புகள் தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிரதேச செயலாளர் 0777065410 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு உதவி செய்ய முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :