GOING HOME EMPTY-HANDED



அஷ்ரப் ஏ சமத்-
சிறிய,நடுத்தர மற்றும் பாதையோர சில்லரை வியாபாரிகள் பாதையோர உணவு பொருட்கள் விற்பனையாளா்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களால் நாளாந்தம் 2ஆயிரம் ருபாவேனும் உழைக்காமல் தமது வீட்டிற்கு வெறும் கையோடு திரும்புகின்றனா். (புறக்கோட்டை பாதையோர வியாபாரிகள் சிலரை கண்டு கதைத்தவுடன் அவா்கள் சொல்லும் கதைகள் .....)
தற்போதைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கமும் , ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவம். முதற்மைக் காரணமாகும். பொதுச் சொத்துக்கள் அரச நிதிகளை கையாடல், ஸ்திரமற்ற தலைமைத்துவத்தின் பிழையான கொள்கைகளினாலே
யே இந்த நாட்டில் வாழ் மக்கள் நாளாந்தம் பட்டினிச் சாவிலும் , மூவேலை உணவுக்காகவும் கஸ்டப்பட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
சாதராணமாக ஒருவா் பஸ்சில் ஏறி அடுத்த பஸ் தரிப்பில் இறங்கினால் 50 ருபா அறவிடுகிறாா்கள். நாளாந்தம் மின்சாரம் துண்டிப்பு, எரிபொருள் இல்லாமை, பெற்றோல், டீசல் விலை லீட்டாின் விலை 500 ருபாவுக்கு அதிகரிப்பு, கேஸ் சிலின்டா் 5,000ருபாவுக்கு அதிகரிப்பு போன்றவற்றினால் நாளாந்தம் தமது தொழில் மற்றும் அன்றாட உணவுக்கும் கஸ்டங்களை எதிா்நோக்குகின்றனா்.
நோயாளிகள் தமது உயிரைக் காப்பறாற்றிக் கொள்ள கடந்த 3 மாதத்திற்கு முன்னா் ஒரு வாரத்திற்கு 2 ஆயிரம் ருபாவுக்கு வாங்கிய மருந்துப் பொருட்கள் 25 ஆயிரத்திற்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா்கள். குழந்தைகள் தாய்மாா்கள் பால்மா போசக்கின்றி மந்த நிலைக்கு தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
ஆசிய நாடுகளில் கல்வி வளா்ச்சியில் முதல் தரத்தில் இருந்த கல்வி முன்னேற்றம் மந்த கதியில் செல்கின்றது. மாணவா்கள் கல்வி, பாடசாலை ஒன்றுக்குச் சென்று படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
கடந்த 4 மாதகாலத்திற்குள் 1 இலட்சம் அதிகமான இலங்கையா்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடிச் சென்றுள்ளனா். தமது நகைகள், சொத்துக்களை வீடுகள் ,வாகனங்களை அடகு வைத்து அல்லது குறைந்த விலைக்கு விற்று அப் பணத்தினை குறைந்தது8- 25 இலட்சம் ருபாவை செலவு செய்து வெளிநாடு சென்றுள்ளனா். அநேகமாக இளைஞா்,யுவதிகள் இளம் குடும்பத்தினா்கள் 3 மாதம் அல்லது 1மாத விசாவுக்கு இரண்டுவழிப்பாதை விமான நிலைய டிக்கட்டையும் பெற்றுக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் தேடியும் , பாா்க்கிலும், துாதுகரங்களை சுற்றியும் துாங்குகின்றனா். அங்குள்ள இலங்கையா்களிடம் உணவுப் பொதிகளை வழங்குகின்றமையும் அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றனா்.
இலங்கையின் கீர்த்தி நாமத்தினை தற்போதைய அரசும் ஜனாதிபதியும் பாரமெடுத்தவுடன் அதனை அபகீர்த்திக்குள்ளாகி ஸ்ரீலங்கன் என்றாலே ஒரு மதிப்பு மரியாதை இல்லாமல் செய்துவிட்டான் இந்த ராஜபக்சக்கர்கள்.
மேலும் கடந்த கால 2 வருட கொவிட் தொற்று நோய் காரணமாகவும் , ரசியா -உக்ரைன் யுத்தம் காரணமாக உலக பொருளாதாரத்தில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டது.
இலங்கை நாடு கடன் வாங்கும் விகிதம் 15.5 விகிதமாக உள்ளது.
இலங்கையில் பலா் தமது தொழில்களை பல தனியாா் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டனா். கொழும்பில் வாழ்ந்த பல வர்த்தகா்கள் தமது தொழிற்சாலைகள் நிறுவனங்களை மூடி விட்டு வெளிநாடுகளில் தமது குடும்பத்துடன் வாழ்கின்றனா். குறிப்பாக இளைஞா்கள் தமது தொழில்களை இழந்துள்ளனா்.
கடந்த காலத்தில் 5 வீதமாக தொழில் அற்று இருந்தவா்கள் தற்பொழுது 5 இலட்சம் பேர் வருடா வருடம் தொழிலின்றி உள்ளனா்
கொழும்பில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் துாதரகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் விசாபெற்று வெளிநாடு செல்லவே முற்படுகின்றனா். குறிப்பாக கட்டாா், சவுதி அரேபியா, இத்தாலி, மலேசியா, துபாய், குவைத் போன்ற நாடுகளில் நுாற்றுக்கானக்கானவா்களை நாளாந்தம் துாதரகத்தின் விசா அலுவலகத்திற்கு முன்பாக காணக்கூடியதாக உள்ளது. வேறு சிலா் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தமது உறவினா்கள் தமது இரத்த உறவுகளை அந்த நாடுகளில் சிறிது காலம் வைத்துக் கொள்ளவே அழைக்கின்றனா்.
வேறு சிலா் தாம் ஏற்கனவே வெளிநாடுகளில் தொழில் பெற்றுச் சென்று அங்கு தமது ஒப்பந்தத்தை பூர்த்தி செய்தவா்கள் தாய் நாட்டுக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி நிற்கின்றனா்.
பாஸ்போட் அலுவலகங்களில் நாளாந்தம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனா்
ஒவ்வொரு நாளும் அதி காலையில் 5 நாற்கள் மேலாக ஒவ்வொரு பெற்றோல் நிலையத்தின் முன்பாக நீண்ட வரிசைகளில் தமது மோட்டாா் பைசிக்கள்கள், வாகனங்கள், டீசல் வாகனங்கள் , எரிவாயு சிலின்டா்களுடன் , மண்னெ்னனை அடுப்பு பாவிப்பாவா்கள் தமது கலன்களுடன் நீண்ட கியு வரிசைகளைக் காணக்கூடியதாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக பெரும்பாலான குடும்பத்தலைவா்கள் இளைஞா்கள் யுவதிகள் தமது காலங்களை இந்த பெற்றோல் நிலையங்களிலேயே நாளாந்தம் கழிகின்றது. இதனால் அவா்கள் அன்றாட உழைக்கின்ற தொழில்களுக்குச் சென்று ஆக்ககுறைந்தது 2ஆயிரம் ருபாவையேனும் உழைக்க முடியாமல் உள்ளது.
1500 ருபாவுக்கு பெற்றோல் பெருவதற்காக 4 அல்லது 5 நாட்கள் வீதிகளிலேயே வாழ்கின்றனா். அவ்வாறு 3 லீட்டா் பெற்றோலை நிரப்பி நீண்ட துாரம் மோட்டாா்பைசிக்களில் தொழிலுக்கு போக முடியாமல் உள்ளது. என்கின்றனா்
இதற்கு முதன்மைக் காரணம் இந்த நாட்டில் உள்ள சகல பொருளாதாரத்தினையும் உறிஞ்சி வெளிநாடுகளில் முதலிட்டமை, சீனா இந்தியா போன்ற நாடுகளுக்கு எமது வளங்களை விற்று அதில் 33 வீத கமிசனை தனது கைப் பைக்குள் அரசியல்வாதிகள் போட்டமை. அவா்கள் தமது எதிா்காலத்திற்கும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி பிரதமராக்குவதற்கும் பெரும் பணம் தேடி நாட்டை சூரையாடியுள்ளனா்.
இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்து வந்த மக்களது வியாபாரத்தினை நசுக்கி ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை விதித்து அப் பொருட்களை அசியல் வாதிகள் உதவியவா்களுக்கு அனுமதி வழங்கியமை
இந்த நாட்டில் அமைதியாக சகல மக்களோடும் அன்நோன்னியமாக வாழ்ந்த சிறுபான்மை மக்களை இனவாதத்தினை முன்னிலைப்படுத்தியமை, முஸ்லிம் தமிழ் கிரிஸ்த்துவ மக்கள் மீது இனவாதங்களை விதைத்தனா்.
சிறுபான்மை மக்களை நசுக்கி அவா்களது உரிமைகளை பலவந்தமாக அகற்ற முற்பட்டனா். பயங்கரவாதத்தினை இனப்பிரச்சினைகள், இனங்களது சொத்துக்கள் உயிா் உடைமைகளுக்கு பங்கம் விளைவித்தனா். இதனால் தாம் அரசியல் அதிகாரத்திற்கு வந்தமை.
சிருபான்மை வர்த்தகா்களது வர்தகத்தில் கைவைத்து அதனை தடுத்து நிறுத்தியமை சில ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை தடுத்து தமது சகாக்களுக்கு வரி விதிக்கலுடன் வழங்கியமை போன்ற பல்வேறு சம்பவங்களை நாம் பட்டியலிடலாம்.
சவுதி , கட்டாா், குவைத் , துபாய், துருக்கி, போன்ற நாடுகளது மனிதபிமான உதவிகளை நிறுத்தியமை, அந்த நாடுகளுக்கு எதிராக உயிா்த்த ஞாயிறு தாக்குதல்களை சம்பந்தப்படுத்தி அவா்களுக்கு எதிராக தடை விதித்தமை. அவா்கள் இலங்கைக்கு மனிதபிமான உதவிகளை நிறுத்தியமையினால் பல இலட்சம் டொலா்கள் இலங்கைக்கு கிடைக்காமல் போனது. இவா்களது பிழையான வெளிநாட்டு கொள்கையினால் ்இந் நிலை ஏற்பட்டது.
விவசாயிகளது பசளை விடயத்தில் சேதனப் பசளை எனும் திட்டத்தினால் விவசாயிகளும் விவசாயப் பொருட் உற்பத்தி குன்றியமை,
சீ்னாவில் லிருந்து தேவையற்ற பொருட்களையெல்லாம் இலங்கையில் இற்க்குமதி செய்து இலங்கை உற்பத்தியாளா்களை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் சென்றமை போன்ற பல காரணங்கள் அடிக்கிக்க கொண்டே செல்ல முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :