06 புலம்பெயர் அமைப்புக்கள்,மற்றும் 316 தனிநபர்களுக்கு எதிரான தடைகளை இலங்கை நீக்கியுள்ளது!(விபரங்கள் உள்ளே)



டந்த காலங்களில் இலங்கையில் தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 மாநாட்டின் கீழ், தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட குறித்த ஆறு அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை - உலகத் தமிழர் பேரவை - உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு - திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு - கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பரிந்துரைகளுக்கு அமைய ,கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முழுமையான விபரங்களுக்கு https://bit.ly/3AjzeLh
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :