நிந்தவூரிலிருந்து கொண்டு வரப்பட்ட 1500 லிட்டர் டீசல் உடன் இருவர் காரைதீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள்.
இச் சம்பவம் நேற்று (1) நள்ளிரவு காரைதீவில் இடம்பெற்றது.
காரைதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் .எஸ் .ஜெகத் தலைமையிலான குழுவினர் அதிரடியாக அவர்களை நேற்று நள்ளிரவு 12 .27 மணியளவில் மடக்கி பிடித்தார்கள்.
காரைதீவு பிரதான வீதி விபுலானந்த சதுக்கத்தில் உள்ள போலீஸ் சாவடி ஊடாக குறித்த 1500 லீற்றர் டீசலை ஏற்றிய வாகனம் செல்லுகையில் ,அதனை நிறுத்தி சோதனை செய்யும் போது இந்த டீசல் கடத்தல் பிடிபட்டது.
நிந்தவூரிலுள்ள எரிபொருள் நிரப்புநிலையம் ஒன்றில் இருந்து கொண்டுவரப்பட்ட 1500 லிட்டர் டீசல் ,மாளிகைக்காட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் இவ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.இர்பான் என்பவர் இந்த டீசல் கடத்தலிலே ஈடுபட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டு நேற்று (1) திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
1500 லிட்டர் டீசலும் சீல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment