சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.முறைப்பாடுகளுக்கு அழையுங்கள் 1929



J.f.காமிலா பேகம்-
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது சிறுவர் சித்திரவதை சம்பந்தமாக தகவல்கள் பொது மக்களுக்கு கிடைத்தால், தமக்கு அது தொடர்பாக அறிவிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குழந்தைகள் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக ஒத்துழைப்பை வழங்குவது மக்களின் கட்டாய கடமையாகும் என மேலும் இவ்வதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சிறுவர் சித்திரவதை சம்பந்தப்பட்ட சம்பவங்களால், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் வட்சப் உற்பட பலசமூக ஊடகங்களில் வைரலாக வெளிவந்தன.

காலி ஹபராதுவை பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, வீடியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.காலியில் பிரபல பாடசாலையொன்றின் சுமார் 10 மாணவர்களை, சம்பந்தப்பட்ட அந்தநபர் துஷ்பியோகத்திற்கு உற்படுத்தியுள்ளதாக தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், நேற்று குளியாபிட்டிய பிரதேசத்தில் 5வயது சிறுவனை கத்தியை கழுத்தில் வைத்து சித்ரவதை செய்த தந்தையின் வீடியோ ஒலிப்பதிவு ஒன்று, பல வட்சப் குழுமங்கள் உற்பட, சமூக ஊடகங்களில் வைரலாக பேசப்பட்டது.குறித்த குழந்தையின் தந்தை, தனது மனைவி வெளிநாட்டிலிருந்து வராவிட்டால், குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்யப்போவதாக ,கழுத்தில் கத்தியை வைத்து சித்ரவதை செய்து ,குழந்தையை பயத்தில் கதரவிட்ட வீடியோ ஒலிப்பதிவை , அக்குகுழந்தையின் தாய்க்கு அனுப்பியுள்ளார்.இந்த வீடியோ ஒலிப்பதிவில் அச்சிறுவனின் கழுத்தில் சிறு காயம் ஏற்பட்டதையும் காணக்கூடிதாக இருந்தது.பின்னர் பொலிசாரால் குறித்த தந்தை கைது செய்யப்பட்டார்.அத்துடன் அந்த சிறுவனும் உறவினரிடம் இருக்க விரும்புவதாகவும், தனக்கு தந்தையுடன் இருக்க பயம் என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு கடந்த சில தினங்களாக, பல சிறுவர் பாலியல் வல்லுறவு அல்லது சித்திரவதைக்குற்பட்ட. பல சம்பவங்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவர்களை பாதுகாப்பற்கு ,இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்காக நாட்டு மக்கள் பெரிதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இப்படியான சம்பவங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் 1929 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, தகவல்களை தெரிவிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :