"ப்ளூ நேவி வெற்றிக்கிண்ணம் 2022 " அரையிறுதியாட்டத்திற்கு மருதூர் விளாஸ்டர் தகுதி பெற்றது !





நூருல் ஹுதா உமர்-
ல்முனை லெஜண்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டு முன்னணி கழகங்கள் பங்குபற்றிய "ப்ளூ நேவி வெற்றிக்கிண்ணம் 2022 " 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் அரை இறுதியாட்டத்திற்கு அக்கரைப்பற்று நோ நேம் விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் மூன்றாவது அணியாக நுழைந்துள்ளது.

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 190 ஓட்டங்களை 05 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் றிழ்வான் 47 பந்துகளை எதிர்கொண்டு 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் இஷ்ரத் 38 ஓட்டங்களையும், ஆபாக் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அக்கரைப்பற்று நோ நேம் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்து வீசிய இம்ராஸ் கான், எம்.அலி ஆகியோர் தலா 02 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

அதனடிப்படையில்191 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று நோ நேம் விளையாட்டுக்கழக வீரர்களின் நிதான மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக 17.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்று 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விளாஸ்டர் வி. கழகத்தினரிடம் தோல்வியடைந்தனர். நோ நேம் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் அப்ரிட் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 07 ஓட்டங்களை மட்டும் எதிரணிக்கு விட்டுக்கொடுத்து நான்கு விக்கட்டுக்களை வீழ்த்திய விளாஸ்டர் வி.கழக வீரர் எம். சபான் தெரிவுசெய்யப்பட்டார். அரையிறுதி போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக்கழகத்தை விளாஸ்டர் அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :