சித்தானைக்குட்டி சுவாமியின் 71 வது குரு பூஜையும், அன்னதானமும்!



காரைதீவு சகா-
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 71 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) சிறப்பாக நடைபெற உள்ளது.

ஆலய பரிபாலன சபை தலைவர் பொன்.பாலேந்திரா( ஆசிரியர்) தலைமையில் நடைபெறவிருக்கின்ற அப்பாரம்பரிய நிகழ்விற்கு முன்னோடியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) குரு பூஜை தொடர்பான சித்தர் பட்டய அறிவிப்பு இடம்பெற்றது .
இன்று (3) புதன்கிழமை சுவாமிகள் முத்து சப்புறத்தில் வீதி வலம் வர இருக்கின்றார்.
நாளை (4) வியாழக்கிழமை சித்தர் ஆலயத்தில் கோமாதா பூஜை 210 சித்தர்களுக்கான வேள்வி
அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை என்பன நடைபெற இருக்கின்றன.

வெள்ளிக்கிழமை(5) ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் 71 வது குரு பூஜையும் அன்னதானமும் நடந்தேறஇருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :