பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் காஸ்மீர் சட்டவிரோத நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 8 தினம் அனுஷ்டிப்பு



அஷ்ரப் ஏ சமத்-
ந்தியா சட்டவிரோதமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச ஆக்கிரமிப்பு மற்றும் அம்மக்களை துண்புறுத்தும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 5ஆம் திகதி பாக்கிஸ்தான் நினைவூட்டும் வகையில் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம் பாகிஸ்தான் செய்து வருகின்றது. இலங்கையிலும் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தினால் இன்று (05.08.2022) இத் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்துத்தெரிவித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபாரூக் பர்கி அவர்கள்,

இந்தியாவானது அதன் அரசியலமைப்பின் 370 மற்றும் 35A விதிகளை ரத்து செய்வதன் மூலம் 2019 ஆகஸ்ட் 5 முதல் காஷ்மீரில் மேற்கொள்ளும் சட்ட விரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளானது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் செயல் மட்டுமின்றி, சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிப்பதன் மூலம் அதன் சொந்த அரசியலமைப்பையே மீறுகிறது என்று குறிப்பிட்டார். 1948ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையே ஜம்பு காஸ்மீர் பிரச்சினை இருந்து வருகின்றது.

மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில், "பாகிஸ்தான் காஷ்மீரிகளுக்கு எப்போதும் மதிப்பளிக்கிறது. சுயநிர்ணய உரிமைக்கான காஷ்மீரிகள் நியாயமான போராட்டத்தையும், உறுதியான நம்பிக்கையையும் பாகிஸ்தான் பெருதும் போற்றுகிறது. பாகிஸ்தான் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகள் மூலம் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவின் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து விழிப்பூட்டிக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் எப்போதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்பதோடு அவர்களையும் பாகிஸ்தானியர்களாகவே நோக்கும்.நமது காஷ்மீர் சகோதரர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பெற உதவுவதற்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்பது நமது தேசிய தீர்மானமாகும்" எனவும் குறிப்பிட்டார்.

பாக்கிஸ்தான் காஸ்மீர் விடயமாக 2019 ஜ.நா. சபையிலும், மனித உரிமை ஆணைக்குழுவிலும் இவ் விடயத்தினை முன்வைத்துள்ளது. ஜ.நா..அமையம் கூட அப்பிரதேச மக்களை தாக்குதல், கடத்துதல. இம்சை செய்தல், சிறுவா்களை பெண்களை தாக்குதல் விடயங்களை நிறுத்தும்படியும் கூறியும் இந்தியா தொடா்ந்தும் முஸ்லிம்களை தாக்கிவருகின்றது. இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் உயா் ஸ்தாணிகா் அங்கு தெரிவித்தாா்.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயலாளா் திருமதி அஸ்மா கமால், பாகிஸ்தான் ஜனாதிபதி டாக்டர் ஆரிஃப் அல்வியின் இந்நாள் குறித்த செய்தியையும், ஊடகச் செயலாளா் திருமதி கல்சூம் கைசர் பிரதமர் முஹம்மது ஷாபாஸ் ஷரீப்பின் செய்திகளையும் ஊடகங்களுக்ககாக வாசித்தாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :