கஜேந்திரன் எம்.பி க்கு பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்புவதாக குற்றச்சாட்டு



பாறுக் ஷிஹான்-
ஜேந்திரன் எம்.பி க்கு பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியும் சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவு படுத்தும் கலந்துரையாடல்கள் வட கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

நாட்டில் தற்போது அரசியல் ரீதியான குழப்பங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.அண்மையில் ஜனாதிபதி தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரிவாகி இருந்தார்.எங்கள் மக்களின் கருத்துக்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரது கட்சியை சேர்ந்த கஜேந்திரன் எம்.பி தீர்விற்கான பொறிமுறை குறித்து தெளிவில்லாது மக்களை குழப்பி வருகின்றார்.அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை அகற்றுவதற்கு முயல்வதுடன் நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை தெரிவிக்கின்றார்.அவருக்கு வழியும் தெரியாது இலக்கும் இல்லை.அம்பாறை மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளது.இதனை கூறினால் சமூக ஊடகங்களில் என்னை தாக்குகின்ற குழுக்கள் தயாராகும் என குறிப்பிட்டார்.

இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , தவராசா கலையரசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் சமகால அரசியல் போக்கு 8வது ஜனாதிபதி தெரிவும் கூட்டமைப்பின் வாக்களிப்பு தீர்மானம் பற்றிய தெளிவு படுத்தல்களை வழங்கினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :