மணல் வியாபாரத்தில் மாபியாக்களின் தலையீட்டை தடுக்க அமைச்சர் ஆராய்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டடப்பணிகளுக்குத் தேவையான மண்ணை முறையாக விநியோகிப் பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் வியாபாரத்தில் நிலவும் மாபியாக்களின் தலையீடு மற்றும் முறைகேடுகளை ஒழித்து, நியாயமான சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சில் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்திலே இம்முடிவு எட்டப்பட்டது. அமைச்சின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் வகையில் வாரமொரு தடவை இவ்வாறான கூட்டங்களை நடாத்துவதற்கு அமைச்சர் நஸீர் அஹமட் அண்மையில் தீர்மானித்திருந்தார்.

இதற்கமைய கடந்த (22) நடைபெற்ற கூட்டத்தில் மணல் அகழ்வு, இத்தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னும் இதற்காக அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. முறையற்ற மணல் அகழ்வுகள் சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் இதைத் தடுப்பதற்குரிய வழிகள் குறித்தும் அமைச்சின் உயரதிகாரிகள் அமைச்சருடன் கலந்துரையாடினர்

மேலும்,முறையான மணல் அகழ்வுகளால், சாதாரண பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இடைத்தரகர்கள் தலையிடுவதால்,விலைகள் தேவையற்ற வகையில் உயர்கிறது.

சாதாரண வீடொன்றைக் கட்டுவதற்கு கூட, இவர்களால் மணலை பெற முடியாதுள்ளது. ட்ரெக்டர்கள், லொறிகளில் மணலை ஏற்றுவதை தவிர்த்து ரயில்பெட்டிகள், ரயில் இழுவைப் பெட்டிகளில் ஏற்றுவதற்கும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அதிக மணலை ஒரே தடவையில் கொண்டு வர, ரயில்பெட்டிகள் உதவும். காலவிரயம் மற்றும் பொருள்

விரயத்தையும் (வெளியில் விழல்) இதனால் தவிர்க்கலாம். நேரடியாக,மணல் கடத்தலில் நேரடித் தொடர்புடையோரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவும் அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சி்ல் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ரூபசிங்க, புவியியல் சேவை மற்றும் நில அகழ்வுப் பணியகத் தலைவர் செனரத் ஹேவகே மற்றும் அமைச்சரின் ஆலோசகர் திரு ஹெட்டியாராச்சி, முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :