சர்வகட்சி அரசாங்கம் என்ற விடயத்தை உருவாக்கி சர்வதேச நாடுகளுக்கு ஒரு மாயையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இவ்வாறன பேச்சுக்கள் நடைபெறுகிறது.- நாடாளுமன்றில் இம்ரான் மஹ்ரூப் எம். பி தெரிவிப்பு..



ஹஸ்பர்-
ன்று இந்த அரசாங்கம் 134 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஏன் முயற்சிக்கின்றார்கள் என்ற சந்தேகம் எழும்புவதாகவும் இதன் பின்னனியில் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் மாயை இருப்பதாகவும் புதன்கிழமை (10)
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,

இந்த அரசாங்கத்தின் மீது சர்வதேசம் நம்பிக்கையிழந்து காணப்படுவதால் IMF, மத்திய கிழக்கு நாடுகள் உதவமுடியாது என்று கூறியிருக்கின்றன. ஏனைய வெளிநாட்டு உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆகையால் சர்வகட்சி அரசாங்கம் என்ற விடயத்தை உருவாக்கி சர்வதேச நாடுகளுக்கு ஒரு மாயையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இவ்வாறான பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இந்த சர்வகட்சி அரசாங்கத்திலே எங்களுடைய எதிர்கட்சியும் தயாராக இருக்கிறது. ஆனால் அமைச்சுப்பதவிகள் பெற்றுக்கொள்ளாமல் பாராளுமன்றத்தில் உதவுகின்ற அதேவேளை நல்ல விடயங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இந்த அரசாக்கத்தை வழிநடாத்தி உதவுவதற்கும் எங்களுடைய கட்சியின் தலைவரும் நாங்களும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவருடைய உரையில், திருமலை மாவட்டத்தில் வாழ்கின்ற மீனவர்கள் தங்களின் தொழிலை செய்வதற்கு போதியளவு மண்ணென்னை கிடைக்காமல் அல்லல் படுகின்றனர் என்ற விடயத்தையும் தொடர்புடைய அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :