ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளருடனான எதிர்க்கட்சித் தலைவரின் சந்திப்பு


க்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் திரு. David McLachlan-Karr அவர்களுடனான சந்திப்பொன்று நேற்று (17) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கூட்டுறவுச் சட்டகத்தை (UNSDCF) 2023-2027 அறிமுகப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொடர்புடைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கை எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையீடு தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையுடன் முறையான மற்றும் நேர்மறையான ஈடுபாட்டின் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. திரு David McLachlan-Karr உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போது இலங்கை வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி ஹனா சிங்கரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :