காரைதீவில் சாதனை படைத்த மாணவர்களை வீடு தேடிச் சென்று வாழ்த்திய தவிசாளர்!







காரைதீவு நிருபர் சகா-
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணில், இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வீடுதேடிச்சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார் .

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி வரலாற்றில் அதிகூடிய நான்கு மாணவர்கள் மருத்துவத் துறைக்கும், ஒரு மாணவி பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இது விபுலானந்தாவில் வரலாற்றுசாதனையாகும்.
இவ் வரலாற்று சாதனையை நிகழ்த்திய மாணவர்கள் ,அதிபர், ஆசிரியர்கள் ,பெற்றோர்களுக்கு அவர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மாணவிகளான லோகநாதன் புவித்ரா, சகாதேவராஜா டிவானுஜா, தங்கவடிவேல் டயானு ஆகியோர் 3 ஏ சித்திகளையும், ராஜேஸ்வரன் கம்ஷாயினி இரண்டு ஏ ஒரு பி சித்திகளையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளனர். இதேவேளை ரஜிநாதன் துர்க்கா மூன்று ஏ சித்திகள் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த ஐந்து சாதனை மாணவிகளின் வீடுகளுக்குச் சென்ற தவிசாளர் ஜெயசிறில், நிதி அன்பளிப்பையும் வாழ்த்துக்களையும் வழங்கினார். கூடவே ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜாவும் சமுகமளித்திருந்தார்.

சாதனை மாணவர்களின் பெற்றோர் இவ்வாறு வீடு தேடி வந்து வாழ்த்தி ஊக்கப்படுத்தியமைக்காக தவிசாளருக்கும், ஆலோசகருக்கும் நன்றி தெரிவித்தனர்.

அங்கு தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கருத்து தெரிவிக்கையில்..
எமது விபுல மண்ணுக்கு பெருமை சேர்த்த கல்விச் சாதனையாளர்களை பாராட்டுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் வரலாற்றில் நான்கு மாணவர்கள் ஒரே தடவையில் மருத்துவத் துறைக்கு தெரிவாகியமை பாராட்டுக்குரியது. பொதுவாக சமய சமூக செயற்பாடுகளில் முன்னணியில் செயற்படும் பிரமுகர்களின் பிள்ளைகளே இச் சாதனைகளை புரிந்து ள்ளனர். மக்கள் சேவைகள் என்றும் நல்லதையே தரும் என்பதற்கு இது நல்ல சான்று. மீண்டும் காரைதீவுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் இம்மண்ணின் தலைவர் என்ற முறையில் நன்றியுடன் பாராட்டுகிறேன். என்றார்.

இதற்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன காரைதீவில் இலங்கை கல்வி நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்று தெரிவான சோ.ஸுரநுதன் மு.தர்சிகா நே.வரணியா ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று பரிசு வழங்கி பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :