மருதமுனை மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலில் காரியாலயம் திறக்கும் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
ருதமுனையில் நீண்ட காலமாக ஜும்ஆ பள்ளிவாசலாக இயங்கி வரும் மழ்ஹருள் மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசலின் நீண்டகாலத் தேவையாக இருந்து வரும் காரியாலயம் ஒன்று திறக்கும் நிகழ்வு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எல்.எம்.ஜெமீல் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

மக்பூலியா ஜும்ஆ பள்ளிவாசல் மஹல்லா வாசிகள் பள்ளிவாசலோடு நூறு வீதம் உயிரோட்டமான நடவடிக்கைகளுக்கு தொடர்பை பேணுவதற்கும் பிரதேச மக்களின் கலை, கலாசார, கல்வி, சுகாதார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் அவர்களை ஊக்குவிக்கவும் இதனூடாக வட்டியில்லா இஸ்லாமிய கடன் திட்டமொன்றை ஆரம்பித்து மஹல்லாவாசிகளின் வறுமையை ஓரளவேனும் தணிக்க முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இக்காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக இப்பள்ளிவாசல் முன்னாள் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.முஸ்தபா கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இதில் விஷேட அதிதியாக மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமது அன்ஸார் மெளலானா விரிவுரையாளர் (நளிமி) அவர்களும் கெளரவ அதிதிகளாக மருதமுனை மஸ்ஜித்தில் கபீர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் ஜ.எல்.எம்.மாஹிர், மருதமுனை ஸக்காத் நிதியத்தின் தலைவர் எம்.எம்.ஜெபீர் (நளிமி) செயலாளர் எம்.ஏ.யாசிர் றிப்கி, பொருளாளர் ஆர்.எம்.சியாட் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :