நகை திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபரொருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த 26 ஆம் திகதி சுமார் 6 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன.
இவ்வாறு திருடப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க பொலிஸாருடன் இணைந்து நகை உரிமையாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், திருடப்பட்ட நகைகளை தனியார் அடகு நிலையம் ஒன்றில் நபரொருவர் அடகு வைக்கச் சென்றபோது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment