பெயர் பதிக்கும் தகைகள் நூல் வெளியீடு!

ஏறாவூர் சாதிக் அகமட்-
ஹாஜியானி நஸீரா எஸ். ஆப்தீன் (ஓய்வு பெற்ற பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்) எழுதிய பெயர் பதிக்கும் தகைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு புத்தொழி செயற்பாட்டு மையம் அமைப்பினால் இன்று மட்/மம/அல்முனீறா பாலிகா மகா வித்தியாலத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சி.எம். சயீட் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யத் அலிஸாஹிர் மௌலானாவும் தவிசாளர் எம்.எஸ்நழீம் (ஏறாவூர் நகரசபை), நிஹாறா மௌஜூத் (பிரதேச செயலாளர் ஏறாவூர் நகரம்), எஸ்.எச்.எம். முஸம்மில் (பிரதேச செயலாளர் கோரளைப்பற்று மத்தி), யூ.எல்.எம். ஜெய்னுதீன் (ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்), சிறப்பு அதிதிகளாக செய்யித் அஹமத் ஸாஹிர் மௌலானா (சமூக ஆர்வலர் கிழக்கு மாகாணம்), எம்.எம். சாலி (தவிசாளர் நஸீஹா கன்ட்ரக்சன்), எச்.எம். முகம்மது முனாபர் (EAQ ஸ்தாபக உறுப்பினர்), மருத்துவர் எச்.எம்.எம். மெஜூத் (போதனா வைத்திய சாலை மட்டக்களப்பு), கலாநிதி ஏ.ஜி. அப்துர் ரஹ்மான் (தலைவர் AG அப்துர் ரஹ்மான் பௌண்டேசன் ஏறாவூர்) ஆகியோர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதம அதிதி கௌரவ அதிதிகள் மற்றும் சிறப்பு அதிதிகளுக்கு பெயர் பதிக்கும் தகைகள் புத்தகங்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :