அரசியல் தலைகள் மாற்றும் சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம்.-எதிர்க்கட்சித் தலைவர்



ற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றாலும், அரசியல் தலைகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்டவை, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் அரசியல் சூதே இத்தகைய பல கலந்துரையாடல்களில் காணக்கிடைப்பதாகவும், இந்நேரத்தில்,தன்னைப் பற்றி சிந்திப்பதை விட நாட்டைப் பற்றி சிந்திப்பதே இடம் பெற வேண்டும் என்பதோடு, அமைச்சர்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதால் நாட்டுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்ததாது, புதிய கட்டமைப்பின் கீழ் ஒரு தேசிய ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை எட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (1) நடைபெற்ற ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடு குறித்து சிந்திக்கவும், நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தருணமும் வந்துள்ளதாகவும்,

சுயநலத்திற்கு பதிலாக, பரோபகார மனோபாவமும் சந்தர்ப்பவாதத்திற்கு பகரமாக நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்கும் மனோபாவமும் வேண்டும் எனவும், சலுகைகள்,

வரப்பிரசாதங்களை பெற்று மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு பதிலாக அறிவார்ந்த முறையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு சகல கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்ற குழு அமைப்பின் ஊடாக சாதகமான பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவித்த அவர், வரப்பிரசாதங்களை பெற்று கூடிய சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு இது நேரமல்ல எனவும்,தற்சமயம் பங்கேற்பு அபிவிருத்தி மூலம் நாட்டை கட்டியெழுப்புவதே மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தானும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி நம்பிக்கை கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :