ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை யதார்த்தமானது என்று தான் எண்ணுவதாகவும், சர்வகட்சி அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஆதரவளிக்க தான் உட்பட தனது தரப்பினர் தயாராக இருப்பதாகவும்,எனினும் இதன் போது அமைச்சுப்பதவிகளுக்கான சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியலில் ஈடுபடுவதற்கு ஒருபோதும் தான் தயாராக இல்லை என்றும் இன்று(03) புதிய பாராளுமன்ற சபை அமர்வின் நிறைவில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரையை முழுவதுமாகப் பார்க்கும் போது இது சாதகமான பேச்சாகவே அமைந்துள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அவ்வாறே இந்த உரையின் மிகவும் சாதகமான அம்சமாக, சர்வ கட்சி ஒன்றிணைந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் தொடர்பான விதிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன எனவும்,ஒருபுறம், கட்சித் தலைவர்களைக் கொண்ட ஒரு பேரவை மூலம் செயற்படுவதும், மறுபுறம்,மக்கள் பங்கேற்பு அரசாங்கத்திற்கான மக்கள் பேரவை ஸ்தாபிக்கப்படுவதும், மேற்பார்வைக் குழுக்களும் செயல்படுவதாகக் காணப்படுவதாகவும்,அந்த செயற்பாடுகளை தாம் பாராட்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள் தற்போதைய அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பலமான குழுக்கள் அமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் சர்வ கட்சித் திட்டத்தின் பிரதான கட்டமைப்பின் 3 பகுதிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதால், யாரேனும் அமைச்சுப்பதவிகளுக்கான சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியலில் ஈடுபட்டு சந்தர்ப்பவாத சர்வகட்சி ஆட்சியில் நுழைய முற்பட்டால், அது சர்வ கட்சி ஆட்சியாக அமையாது என்றும், அது மக்களின் தோள்களில் சுமையை ஏற்றும் ஆட்சி என்றும், ஜனாதிபதியின் உரையில் அந்த விடயங்கள் உள்ளடக்கப்படாதது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேசிய பேரவையை வலுப்படுத்துதல், கட்சித் தலைவர்கள் பேரவையை வலுப்படுத்துதல் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு அதிகாரம் அளித்து இந்தப் பயணம் தொடர்ந்தால் மிகவும் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கொள்கை தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அந்த கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை சபைகள் ஊடாக மாத்திரமே என்றால் தனது ஆதரவை வழங்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment