சார்ப் போட்டியில் பங்கு பற்ற. திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு





எம்.ஏ.முகமட்-
ங்கையில் நடை பெறவுள்ள 7வது தெற்காசிய உதை பந்தாட்ட (சார்ப்) 17வயதின் கீழ் போட்டியில் பங்கு பற்றுவதற்கு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திலிருந்து 3 வீரர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உதை பந்தாட்ட சம்மேளனத்தின் இணைப்பாளரும் கிண்ணியா உதை பந்தாட்ட லீக்கின் தலைவருமான ஏ.எல்.எம்.நபில் ஆசிரியர் தெரிவித்தார்.
அவர் ஊடகங்ளுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறியதாவது,

எதிர் வரும் செப்டம்பர் மாதம் 4 தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொழும்பில் நடை பெறவுள்ள சார்ப் உதைபந்தாட்ட 17 வயதின் கீழ் போட்டியில் பங்கு பற்றுவதற்கு இலங்கை வீரர்களை தெரிவு செய்யும் மாகாண தேர்வு கடந்த சனிக் கிழமை பொலநறுவையில் இடம் பெற்றது.இத் தேர்வில் 250க்கு மேற் பட்ட வீரர்கள் பங்கு கொண்டு அதில் 25 பேர் தெரிவு செய்யப் பட்டனர்.

இதனையடுத்து அகில இலங்கை ரீதியாக நடை பெற்ற போட்டிக்கான இறுதித் தேர்வு பெத்தகனே விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.இதில்1200 மாணவர்கள் கலந்து கொண்டு 35 மாணவர்களே இலங்கை அணியின் வீரர்களாக தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த அல் அக்ஸா தேசிய பாடசாலையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.முபாஸ்,ஏ.எம்.சமீம், கிண்ணியா மத்திய கல்லூரியை சேர்ந்த எம்.ஹிப்னி ஆகிய மூவருமே இங்கை அணிக்காக தெரிவு செய்யப் வீரர்களாவார்.

இப் போட்டி டொரிங்டன் ரஸ் ஹவுஸ் மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இந்தியா,மாலைதீவுள்,பாகிஸ்தான்,பங்ளாதேஸ்,நேபாளம், பூட்டான்,இலங்கை ஆகிய 7 தெற்காசிய நாடுகள் பங்கு பற்றவுள்ளன.இப் போட்டிகள் இண்டு குழுக்ளாக பிரிக்கப் பட்டுள்ளன.

ஏ குழுவில் இந்நியா,பங்ளாதேஸ்,பாகிஸ்தான்,மாலைதீவுகள் அணிகளும், பி குழுவில் இலங்கை,நேபாளம்,பூட்டான் அணிகளும் இப் போட்டிகளில் பங்கு பற்றவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :