டயஸ்போரா தமிழ் புலம் பெயா் தொண்டா் நிறுவனங்களின் தடை நீக்கத்தை வரவேற்கும் நசீர் அஹமட்



அஷ்ரப் ஏ சமத்-
னாதிபதி கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சா் என்ற ரீதியில் டயஸ்போரா தமிழ் புலம் பெயா் தொண்டா் நிறுவனங்கள் 6 நிறுவனங்களின் தடையை நீங்கியிருந்தாா். இவா்கள் இலங்கையில் முதலிடுவதற்கும் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கும் வரவேற்கின்றோம் அதனைப் போன்று முஸ்லிம் சமூகத்தில் சமுகங்களுக்கு சேவை.செய்யும். கல்வி மத ரீதியாக உள்ள 11 நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அதனை அவா்களது நடவடிக்கைகளை பரிசீலித்து தடையை நீக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
என அமைச்சா் நசீர் அஹமட் இன்று 17 புதன்கிழமை அவரது அமைச்சில் அமைச்சின் புதிய திட்டங்கள் சட்ட வரைபுகள் பற்றி நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே என்னால் எழுப்பட்டக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்

அவா் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்
 
உதாரணமாக குருநாகல் பரகதெனியாவில் உள்ள அரபிக் கல்லாரி 5 தசாப்தங்காளக இயங்கி வருகின்றது. இக் கல்லுாாியின் நிறுவனம் முஸ்லிம் அநாதை மாணவா்கள் கல்விக்கு, பல்கலைக்கழக மாணவா்கள் கல்வி வசதிகளுக்கு மாதாந்தம் புலமைப் பரிசில், குடிதண்னீா், வீடு கட்டுதல் போன்ற திட்டங்களை கடந்த 40 ஆண்டுகாலமாக செய்து வந்தனா். அந்த நிறுவனத்தினைக் கூட பாதுகாப்பு அமைச்சி ஊடாக தடை விதிக்க்படப்ட்டுள்ளது. அநத் நிறுவனத்தினா் கடந்த வருடம் உயா் நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் கூட செய்துள்ளனா். இவ்வாறன நிறுவனங்களுக்கு ஒரு சிலா் தமது ஸக்காத் நிதியை வழங்கிவந்தனா் அதனையே ஏழை முஸ்லிம் சிறாா்கள் 1000க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு மாதாந்தம் 1500 ருபாவை கல்விக்காக வழங்கி வந்தனா. கடந்த 2 வருடமாக வறிய மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவ்வாறான நிறுவனங்களை தடையையும் நீக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சூற்றாடல்துறை அமைச்சா் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தாா்.
அத்துடன் சர்வகட்சி ஆட்சியில் எதிா்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட சிறிய கட்சிகளின் தலைவா்களான ரவுப் ஹக்கீம், அதாவுல்லாஹ், றிசாத் பதியுத்தீன் எல்லோறும் தற்போதைய அரசில் ஒன்றிநைந்து சர்வகட்சியில் ஆட்சிமுறையில் இணைந்து மிகுதியாக உள்ள இரண்டறை வருடங்களில் மக்களுக்கு செய்யக்கூடிய சேவையை செய்ய வருமாறும் ஜனாதிபதிக்கு கைகொடுக்குமாறும் அழைப்பு விடுகின்றோம்
தற்போாதைய அமைச்சுக்கள் மாற்றப்படலாம். நான் இன்று இருக்கலாம் நாளை வேறு அமைச்சா் இங்கு இருக்கலாம். ஆகவே அமைச்சுக்களின் திட்டங்கள் கொள்கைகள் நிறுவனங்கள் மாற்றப்படக் கூடாது.

சர்வ கட்சி அமையுமாயின் உலக நாடுகளில் எமது நாட்டுக்குக் உதவக் கூடும். கடந்த ஜனாதிபதி கூட எதிா்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசாவினை அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நாடு, மற்றும் மக்கள் பொருளாதார கஸ்டத்தில் அரசியல் வேறுபாடுகளை கொள்கைகளை ஒரு பக்கம் விட்டுவைத்துவிட்டு மகக்ளின் நாட்டின் பொருளாதாரம் , முறை மாற்றம் எனபவற்றை கருத்திக் கொள்ளல் வேண்டும்.

எதிா்கட்சித் தலைவா் சொல்வது போன்று நாம் மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு போவது என்பது நாட்டின பொருளாதாரப் பிரச்சினைகள் மக்களது வாழ்க்கைச் செலவு மேலும் மோசமடையலாம் தேதர்தலுக்கு போக முன் குறைந்தது 1 வருடமாவது ஜனாதிபதியுடன் இணைந்து செல்வது சிறந்ததாகும். எனவும் அமைச்சா் நசீர அஹமட் தெரவித்தாா்.

எனது அமைச்சின் கீழ் சுற்றாடல் அதிகார சபை , புவியல் மன் அகழ்வு நிறுவனமும் உள்ளது. அதன் திறம்படக் கொண்டு செல்வதற்கு அமைச்சின் தலைவா் டொக்டா் அனில் ஜயசிங்க மற்றும் அதிகார சபையின தலைவா்கள் ஊடாக பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு கிழமையும் கூடி அதனை இலாப மீட்டும் நிறுவனமாகவும் மக்கள் நல்ல சேவை செய்யும் நிறுவனமாக முன் எடுத்து வருகின்றோம். எனவும் அமைச்சா் நசீர் அஹமட் தெரிவிததாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :