*நகர அபிவிருத்து மற்றும் வீடமைப்பு அமைச்சின் பொது மக்கள் தினத்திற்கு வந்த வாசு...



முனீரா அபூபக்கர்-
டந்த காலங்களில் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பொது மக்கள் தினம் முறையாக நடத்தப்படாமல் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பொது மக்கள் தினம் நேற்று (22) முதல் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள் அல்லது பொது முகாமையாளர்கள் இந்த பொது மக்கள் தினத்தில் பங்குபற்றுவதை அமைச்சர் கட்டாயமாக்கினார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பில், அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்ற சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளருமான வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்டார்.

நுகேகொட பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையொன்றை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் முன்வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த பிரச்சினைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சில நிமிடங்களில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தார்.


பொது மக்கள் தினத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு வாராந்தம் பதில் அளித்து அந்த வாரத்தில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தார்.


மக்களை ஒருபோதும் அலைய வைக்கக் கூடாது என்று கூறிய அமைச்சர், அடுத்த பொது மக்கள் தினத்தில் அந்தப் பிரச்சினைகள் முன்வைக்கப்படாமல் இருப்பதை அனைத்து அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :