சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தினுடனான நட்புரீதியிலான 20 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி கிறிக்கட் போட்டியும் புதன்கிழமை (03) மாலை சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரின் தலைமையிலான ரஹ்மத் பௌண்டஷன் அனுசரணையில் ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழக செயலாளர் எல்.எம். சிப்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கண்காட்சி கிரிக்கட் சுற்றுப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழக தலைவர் தனது அணியை முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்க 20 ஓவர்களில் முடிவில் 05 விக்கெட்டுக்களை இழந்தது 170 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு 171 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தினர் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக விக்கட்டுகளை பறி கொடுத்து தடுமாறி கொண்டிருந்தனர். அதனடிப்படையில் 16 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் நேர்த்தியான பந்துவீச்சுக்களினால் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தை வீழ்த்தி வெற்றிபெற்றனர்.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் கழகத்தின் வீரர் சபீர் தெரிவு செய்யப்பட்டார். மேலும் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மற்றும் பிடியெடுத்த வீரர்களின் திறமையை பாராட்டி அதிதிகளினால் பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இப்போட்டிக்கு அதிதிகளாக ரஹ்மத் பௌண்டஷன் ஆலோசகர் ஹாபீஸ் இர்பான், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா, சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், ஏனைய விளையாட்டுக்கழகத்தின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment