ஷுஹதாக்களை நினைவு கூர்வது சமூக அடையாளத்தை அர்த்தப்படுத்தும்.- அமைச்சர் ஹாபிஸ் நசீர்



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூரில் நடைபெறும் ஷுஹதாக்கள் தினம், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்களி்ல் ஒன்றை வெளிப்படுத்துவதாகவும், இத்தினத்தில் ஷஹீதாக்கப்பட்ட முஸ்லிம்கள் சலருக்கும் அல்லாஹுத்தஆலா நல்லருள் பாலிக்க பிரார்த்திப்பதாகவும் சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

நாளை வௌ்ளிக்கிழமை (12) ஏறாவூரில் நடைபெறும் ஷுஹதாக்கள் தினம் குறித்து அவர் அனுப்பியுள்ள செய்தியில் தெரிவி்த்துள்ளதாவது,

முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்த இன ஒழிப்புக்களில் ஒன்றுதான் ஏறாவூர் படுகொலைகள்.1990 ஆகஸ்ட் 11 இல், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் நள்ளிரவில் எழுப்பப்பட்டு துப்பாக்கி, கோடரி மற்றும் இன்னோரன்ன ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு மார்க்க (மதம்) காரணத்துக்காகவே இப்படுகொலை நிகழ்ந்தது. ஒரே வாழிடத்தில்,ஒரே மொழிபேசி,கிட்டத்தட்ட ஒரே கலாசார சாயலுடன் வாழ்ந்த முஸ்லிம்களை கொலை செய்த சக்திகள், முஸ்லிம்களை மாற்று இனமாகவே நோக்கியிருக்கின்றன.

இதனால்தான்,இந்த இன அழிப்பை செய்திருக்கின்றன. இன அடையாளத்தில் இந்தச்சக்திகள், முஸ்லிம்களிடம் என்ன வேறுபாட்டைக் கண்டனரோ தெரியாது.சிறுபான்மை சமூகங்களின் ஒரு மொழித் தாயகத்தை வேறுபடுத்தியதும்,வேரறுத்ததும் இவ்வாறான படுகொலைகள்தான் என்பதை,நான் கவலையுடன் கூறிக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வுகளை நடாத்துவதால்,கடந்த கால கசப்புக்கள் தோண்டி எடுக்கப்படுவதாக எவரும் நினைக்கக்கூடாது. தமிழ்மொழியைப் பேசும் நமது வருங்கால தலைமுறைகள், இத்தவறுகளிலுருந்து பாடம் கற்பதற்கும் இந்த நினைவூட்டல்கள் உதவுமென நான்,நம்புகிறேன்.

எனவே,இந்த ஷுஹதாக்கள் தினநிகழ்வை நடாத்தும் பள்ளிவாசல்கள், நிரவாகிகள்,ஊர்ப்பிரமுகரகளுடன் அதே உணர்விலும்,உறவிலும் மற்றும் சமூக விழிப்பிலும், தானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். இந்நிகழ்வில், பங்கேற்கும் ஷுஹதாக்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லாஹுத்தஆலா ஷகீனத் என்ற பொறுமையை வழங்குவானாக என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :