அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தோர் சிக்கினர்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் சிக்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரனுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் நேற்று (24) மட்டக்களப்பு நகர் மற்றும் ஏறாவூர் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.

இதில், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டதுடன், சில வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகாவும், இனிமேல் அரச கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபாய் வரை தண்டப்பணம் அறவிடவும், ஆறு மாத காலம் சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என்று நுகர்வோர் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சாதாத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :