கதிர்காமத்தில் இருந்து புத்தலை பாதைஊடாக பயணிக்கும் வாகனங்களை மறித்துத்து பழங்கள் கேட்கின்றது யானை.
அந்த வகையில் நேற்று கதிர்காமத்தில் இருந்து சென்ற மட்டக்களப்பு பஸ் வை மறித்து யானை பழம் கேட்டது.
பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் அதற்கு அன்னாசிப்பழம் வாழைப்பழம் போன்ற பழங்களை வழங்கியதும் அவற்றை உண்டு விட்டு அது வழியை விட்டு அகன்றது .
அதன் பின்பு பஸ் சென்றது . இந்த செயற்பாடு தினமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் பக்தர்கள் யானை மீது வைத்திருந்த பயம் பீதி அகல ஆரம்பித்துள்ளது. சிலர் அந்த யானையை தடவி வழிபடுகின்றனர்.
முருகனிடத்தில் அதாவது தம்பி இடத்தில் பெற்ற பழங்களை அண்ணனிடம் வழங்கிவிட்டு வருகின்றார்கள் என்று பலரும் பேசிக்கொண்டனர்
0 comments :
Post a Comment