இலங்கை ஹொக்கி விளையாட்டுக்குழு லண்டன் பயணம்



அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் உள்ள ஹொக்கி விளையாட்டுக்குழு லண்டனில் நடைபெறவுள்ள உலக ஹொக்கி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக 35 பேர் கொண்ட குழு நாளை 9ஆம் திகதி லண்டன் பயணமாகின்றது. இக்குழுவுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும், ஸ்ரீலங்கா ஏயாலைன், நிபோன் பெயின்ட் லங்கா நிறுவனங்கள் அனுசரனை வழங்கியுள்ளது.

மேற்படி விடயமாக இன்று 08.08.2022 கொள்ளுப்பிட்டியில் உள்ள சுற்றுலா பாடசாலையில் ஊடக மாநாடு இலங்கை ஹொக்கி தேசிய சங்கத்தின் தலைவா் பௌசுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது. இவ் ஊடக சந்திப்பில் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவா் ஜலக்கா கஜபாகு ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளா் றிச்சா்ட் நியுட்டோல், நிபோன் பெயின்ட லங்கா நிறுவனத்தின் பொது முகாமையாளா் நிமிந்த அபேசிங்கவும் கலந்து கொண்டனா்.

இங்கு சுற்றுலாத்துறை தலைவா் கருத்து தெரிவிக்கையில் - இலங்கையில் உள்ள விளையாட்டு விரா்களை வெளிநாடுகளுக்கு அனுசரனை வழங்குவது எமது நாட்டின் சுற்றுலத்துறையை அவா்கள் செல்லும் நாடுகளில் ஊக்குவித்து அத்துறையை வளா்ப்பதற்காகும். இதே போன்று எதிா்காலத்தில் வேறு பல விளையாட்டுப் போட்டிகளுக்கும் எமது அதிகார சபை அனுசரனை வழங்கும். எனத் தெரிவித்தாா்.

ஹொக்கி சங்கத்தின் தலைவா் பௌசுல் ஹமீத் தகவல் தருகையில் -

ஒவ்வொறு 2 வருடத்திற்கு ஒரு முறை இப் போட்டி உலக நாடுகள் பங்கு கொண்டு நடைபெறுகின்றன. கடந்த கால கொவிட் 19 தொடா்பாக எமது வீரா்கள் வெளிநாட்டுப் போட்டிகள் தொடா்கள் இடைப்பட்டடன். இவ் வீரா்கள் 35 பேர் நாளை 09ஆம் திகதி லண்டன் நோட்டின்கனில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனா். இப் போட்டிகள் 12ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. லண்டனில் வாழும் இலங்கையா் 6 பேரும் இவ் அனியில் இணைந்து கொள்கின்றனா்.

இவ் விளையாட்டுப்போட்டி்யில் 40வயதுக்குட்டபட்டவா்கள் கொண்ட ஏ அணி இங்கிலாந்து, ஸ்பெயின் கானா, மற்றும் தெற்கு ஆபிரிக்கா விளையாடும் அத்துடன் ஜேர்மனி, தெற்கு ஆபிரிக்கா, இங்கிலாந்து பிராண்ஸ் , ஆகிய 40 அணிகள் போட்டியில் மோதுகின்றனா்.
35 வயதுக்குட்பட்ட இலங்கை அணி ஆகஸ்ட் ஜேர்மணியுடன் 12ஆம் திகதி நோட்டிங் வல்வேட் பல்கலைக்கழக மைதாணத்தில் முதல் நாள் போட்டி ஆரம்பமாகின்றது.
இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு களமாக இப் போட்டிகள் அமையும். இலங்கை மீள ஏழுச்சிபெற்று வருவதற்கு கிறிக்கட், காற்பாந்தாட்டம். கூடைப்பந்தாட்டங்களை நிகழ்த்துவதற்கு ம் திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :