லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் நீம் நிறுவனம் நிதியியல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
ற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 320 J ஒல்டன் மற்றும் 320 D ஸ்ரஸ்பி தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, அம்பகமுவ கந்தவேலாசுத சுவாமி ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர். இந்நிகழ்வு ஒல்டன் கந்தவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது.

இதற்கான நிதியுதவியினை லண்டன் எல்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் மற்றும் Neem நிறுவனம் வழங்கி வைத்திருந்தனர். இதனை Friendly Ship Foundation மற்றும் நியூ சண் ஸ்டார் இளைஞர் கழகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :