இலங்கையில் மலையகப்பகுதியில் சிறிய வெள்ளப் பெருக்கு நேற்று இடம்பெற்றது. நாவலப்பிட்டி .இரத்தினபுரி, நுவரெலியா போன்ற பிரதேசங்களில் தொடா்ச்சியாக பெய்த மழை வீழ்ச்சியினால் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் சிறிய பாலங்கள். மண்சரிவுகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பாடசாலைகள், கட்டிடங்கள். வீடுகள் மழை நீர் பெருக்கெடுத்தமையினால் வீடுகளும் பாதைகளும் நீர் உட்புகுந்து அவா்களது உடைமைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களில் இடம் பெயா்ந்துள்ளனா். மாத்தறை, மற்றும் கிழக்குமாகான கடலோரப் பகுதிகளும் கடல் நீர் பெருக்கெடுத்துள்ளன. இதனால் மாத்தறையில் அப்பிரதேசங்களில் தற்காலிக கொட்டில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. என அனா்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளா் பிரதீப் கொடிப்பிலி ஊடகங்களுக்குத் தெரிவித்தாா்
0 comments :
Post a Comment