கல்முனை கிறீன்ட் பீல்ட் குடியிருப்பு பகுதியை அண்மித்து காணப்படும் நீரோடையின் பாதுகாப்பு அணை மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகின்றமையினால் இதனை உடனடியாக சீர் செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
குறித்த நீரோடைக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அணை உடைந்து காணப்படுவதனால் நீர் சென்று மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிலப்பகுதி தாழ் இறங்கி காணப்படுவதுடன் அருகிலுள்ள வீதிக்கும் பாதிப்பு எற்ப்படும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
சுமார் 400க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள், கல்முனை கிறீன்ட் பீல்ட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருவதுடன் அரச காரியாலயத்திற்க்கு வேலைக்கு செல்வோர்,பாடசாலை மாணவர்கள்,விவசாயிகள் பொது மக்கள் என பலரும் நாளாந்தம் குறித்த நீரோடைக்கு அருகில் உள்ள வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் நீரோடை பகுதியில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து உள்ளதுடன் நீரோடைக்கு அருகில் வெற்று பிளாஸ்டிக் போத்தல்கள் குப்பைகள் உள்ளதையும் காண முடிகின்றது.
அத்துடன் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நீரோடையினால் அதிகமாக நீர் செல்லக்கூடிய நிலை உள்ளதுடன் மேலும் நீரோடைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு அணை மற்றும் வீதி என்பன மேலும் சேதமடையும் வாய்பு உள்ளது
இது தொடர்பில் கல்முனை பிரதேச அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment