வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க... கல்முனை பிராந்திய மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பாரிய ஒத்துழைப்பு



றியாஸ் ஆதம்-
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், கல்முனை பிராந்திய மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு பங்களிப்போரை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் பாராட்டியுள்ளார். இப்பிராந்தியத்தின் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்களாலே, சுகாதார சேவைகளை திறம்பட நடாத்த முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்​,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் பிரச்சினை, மருந்து தட்டுப்பாடு,போக்குவரத்து நெரிசல் என சுகாதாரத்துறையினரும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். ஏனைய துறைகளைவிடவும் சுகாதாரத்துறையே இதனால், படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக மருந்துத் தட்டுப்பாடுகளை ஓரளவிற்கு சமாளித்தாலும், எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அம்பியுலன்ஸ் வண்டிகள் மற்றும் மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு முடியாமலுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இப்பிராந்திய மக்களதும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் அவசியமாகத் தேவைப்படுகிறது. இதற்கிணங்க எமது பிராந்திய பணிமனைக்குட்பட்ட வைத்திசாலை நிருவாகத்தினர், வைத்தியசாலைகளின் அபிவிருத்திக் குழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க உழைக்குமாறு சகலரையும் பணித்தோம். இந்த ஆலோசனைக்கிணங்க தனவந்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களிடம் உதவிகளைப் பெறுவதற்கு முனைப்புக்காட்டப்பட்டது.
நிந்தவூர் பள்ளிவாசல் மற்றும் பிரதேச சபை ஆகியன அப்பிரதேச வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பவற்றுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை எரிபொருட்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
அதேபோன்று சம்மாந்துறை வைத்தியசாலைக்குத் தேவையான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும், எரிபொருளுக்கு தேவையான நிதியும் பொதுமக்களின் பங்களிப்புடன் பள்ளிவாசல் நிருவாகம், வக்பு சபை மற்றும் ஜமாஆத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு அங்குள்ள பிரதேச சபை முன்வந்துள்ளது. அங்குள்ள அம்பியுலன்ஸ் வண்டியின் பெற்றரி பழுதடைந்த போதிலும் அவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், அங்குள்ள முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டது.

குறிப்பாக, இக்காலகட்டத்தில் வைத்தியசாலைகள், சுகாதார நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் வழங்கி வரும் பங்களிப்புக்கள் மகத்தானவை. இது முன்மாதிரியானதொரு செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :