வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலயத்தில் காட்டுப் பாதை திறப்பிற்கான விஷேட பூசை நடைபெற்றது.
அதி காலை 6.00 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவசிறி க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார். காலை 7 மணியளவில் குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.
அவ்வமயம் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க , கிழக்கு கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன்,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இந்து சமய செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஏற்பாட்டில் கழுகுமலை பத்து பாடி
காட்டுப் பாதை திறந்துவைக்கப்பட்டது.
வரலாறு காணாத வகையில் இம்முறை 6000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.
முதல் தடவையாக இந்து சமய கலாசார முறைப்படி
கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக காட்டுப் பாதை திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.
0 comments :
Post a Comment