சம்மாந்துறை எனும் நாமத்தை உலகரியச் செய்த மின்மினி மின்ஹாவுக்கு கல்விச் சமூகம் சர்வதேச பறவை விருது வழங்கி கௌரவிப்பு.


லகளாவிய ரீதியிலான பேச்சுப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்று வெற்றிச் சான்றிதழினை சுவீகரித்த சது/அரபா வித்தியாலய பழைய மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) வுக்கு கடந்த செவ்வாய்க் கிழமை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சது/அரபா வித்தியாலயத்தில் அதிபர்- ஜனாபா. எம்.எச்.நூருள் ஹிமாயா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் :

ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06- 10 வயதினருக்கிடையிலான மாணவர்கள் இந்தியா, மலேசியா ,கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து , கட்டார் , மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இன்னும் பல நாடுகலைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற "கல்வி கண் போன்றது" எனும் தலைப்பில் இடம்பெற்ற உலகலாவியப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ரீதியில் வெற்றி பெற்று , பாராட்டுச் சான்றிதழினைப் பொற்றுக் கொண்ட இலங்கை தேசத்தின் சார்பில் கலந்து கொண்ட சம்மாந்துறை மாணவியான ஜலீல் பாத்திமா மின்ஹாவுக்கு சது/அரபா பாடசாலையில் மிக பிரமாண்டமான முறையில் பாராட்டி கௌரவிக்கும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்.எஸ்.எம்.எம்.அமீர் அவர்களும், கௌரவ அதிதிகளாக- வலயக் கல்விப் பணிமனையில் திட்டமிடலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் -எஸ்.எம். ஹைதர் அலி மற்றும் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் - ஏ. எல்.அப்துல் மஜீத் அவர்களும், விஷேட அதிதியாக , சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி- எம்.ஏ. சபூர் தம்பி இன்னும் பல கல்வி அதிகாரிகளும்,பாடசாலை கல்விச் சமூகமும் இணைந்து மின்மினி மின்ஹாவுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி,சர்வதேச பறவை எனும் விருதும் வழங்கி கௌரவித்திருந்தனர்.

இம் மாணவி இதற்கு முன்னர் தமிழ்நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய இந்திய தேசத்தின் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுக் கண்ணி விருது, தமிழ் நாட்டு அரசின் இளமாமணி காந்தி விருது மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த மாணவர் விருது போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட தேசபந்து ஜலீல் ஜீ , எம்.ஆயிஷா தம்பதிகளின் ஏக புதல்வியுமாவார்.

இவர் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் கீழ் இயங்கும் துறைச்சிறார் கலைக் கழகத்தின் பிரதித் தலைவியாகவும் கலை- இலக்கிய செயற்பாட்டிற்கும் பங்களிப்பினை வழங்கி வருகிறார் என்பதும் சிறப்புக் குறியதே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :