கதிர்காம காட்டுப்பாதையின் நடுக்காட்டில் உள்ள நாவலடியில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் பல தனவந்தர்களின் உதவியோடு இந்த அன்னதானம் கிரமமாக வழங்கப் படுகிறது.
மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் ஆணையாளர் ந.மதிவண்ணன் ஆகியோரின் மேற்பார்வையில் இவ் அன்னதானம் முதல் தடவையாக வழங்கப்பட்டு வருகின்றது.
காட்டுப் பாதை திறந்து தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இவ் அன்னதானம் எதிர்வரும் ஏழாம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்று மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவிக்கிறார்.
இதேவேளை ,தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பு அதே நாவலடி எனுமிடத்தில் அன்னதானம் வழங்கி வருகின்றது .
இவர்கள் குமுக்கனிலிருந்து வியாழ வரைக்கும் குடிநீர் வினியோகத்தையும் சீராக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment