மருதமுனை, முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சங்க அடையாள அட்டை வழங்குதலும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
ம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட வப்ரா முச்சக்கரவண்டி சாரதிகள் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுச்சங்கத்தை சேர்ந்த சாரதிகளுக்கு சங்க அடையாள அட்டை வழங்குதலும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் மருதமுனை அல்-மதீனா வித்தியாலையத்தில் (20) சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.றாஸிக் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியகத்அலி, சிறப்பதிதியாக மருதமுனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜீ.துஸாரா திலங்க,
கெளரவ அதிதிகளாக சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கணக்காய்வாளர் பி.ரி. ஆதம்பாவா, சிரேஸ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.எம்.அஷ்ரப், சங்கத்தின் சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.ரய்சூல் ஹாதி, மருதமுனை மனால் ஜுவலரியின் உரிமையாளர் எஸ்.எச்.அபூல் கலாம், வப்ரா முச்சக்கரவண்டி சாரதிகள் கைத்தொழில் அபிவிருத்தி கூட்டுச்சங்க அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம் றாஸிக், செயலாளர் ஜே.எம்.ஹபீல், பொருளாளர் வை.எல்.எம்.பாறுக் மற்றும் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளால் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அவர்களின் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :