இஸ்லாம் கூறும் நற்செயல்களை வாழ்வில் கடைப்பிடிக்க, முஹர்ரம் மாதத்திலிருந்து முன்வர வேண்டும் என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
முஹர்ரம் மாதப்பிறப்பை கொண்டாடும் விஷேட நிகழ்வு நேற்று கொழும்பு சிவப்பு ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதில்,பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந் நிகழ்வுகள் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் பணிப்பாளா் இப்ராஹிம் அன்சாரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய அமைச்சர் நசீர் அஹமட்
முஸ்லிம் உம்மத்தின் கட்டுக்கோப்பு குலையாதிருப்பதையே அல்லாஹுத் தஆலா விரும்புகிறான். இதனை வலியுறுத்தும் வகையில் “நீங்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்” என்று திருமறை கூறுகிறது. இந்த இறைவசனம் பற்றி எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். நாளாந்தம் சமூகவலைத்தளங்களிலும், முகநூல்களிலும் வசைபாடுவதையே சில இளைஞர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர. இவ் செயலை எமது மாா்க்கம் ஒரு இறந்த மனிதனின் உடம்பை நாம் சாப்பிடுவதற்கு சமன். ஒருத்தருக்கு அவதுாரு சொல்வதென்பதற்கு ....இவ்வாறு நாம் மனித உடம்பை சாப்பிடுவதற்கு விரும்புவோமா ? சற்று சிந்தியுங்கள் காலையில் எழுந்தவுடன் நாம் நமது இளைஞா்கள் சமூக ஊடக வலையத்தளங்களில் ஒருத்தரைப் பற்றி அவதுாறு எழுதுவது என்பது பொல்லாத பாவமாகும்.
இது, எமது சமூகத்துக்குள் பிளவுகளை தோற்றுவிக்கிறது. ஒரு மனிதனை நோவினை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இதற்கான தண்டனைகள் குறித் து இறைவன் எச்சரிக்கிறான். எனவே, சமூக வலைத்தளங்களில் நேரத்தை விரயமாக்காது, புனித குர்ஆனை விளங்க, படிக்க மற்றும் ஓதுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
புனித குர்ஆனின் அர்த்தங்களை படிக்க முனைந்தால், இந்த எச்சரிக்கை பற்றிய அச்சங்கள் எழும். குர்ஆனை படிப்பதற்கு அரபுமொழி தெரிந்திருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். ஆசையோடு முயற்சித்தால் அல்லாஹ் அருள்புரிவான். 1972 இல், எனக்கு 11 வயதாக இருக்கும் போதுதான் புனித குர்ஆனை படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. இதே, பள்ளிவாசலில் “தறாவீஹ்” தொழுகையில் ஓதப்பட்ட “நீங்கள் உங்களுக்குள் தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் என்ற வசனமே இந்த ஆசையை ஏற்படுத்தியது. நாட்டில் இன்றுள்ளது பொருளாதார பிரச்சினை தீர்ந்து சுமுக நிலை ஏற்பட முஸ்லிம்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றார்.
அவா் அங்கு மேலும் தெரிவித்தவது -
இந் நாட்டில் நாம் இனங்களுக்கிடையே ஒன்றுமையாக நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். நான் 11 வயதில் இப் பளிள்வாசலில் தராவிஹ் தொழும் போது எனக்கு குர் ஆனை திருத்தமாக நான் ஓதிய வசனங்களை இங்கு இருந்த ஹதீப் எனக்கு திருத்தமாகச் சொல்லித் தந்தாா். அன்றிலிருந்து நான் ஹாபீஸாக வரவேண்டும் என என்னுள் எழுந்தது.
இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் நாம் பாரிய கஸ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே நாம் வீனான விடயங்கள் நாட்டிற்கு பங்கம் விளைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இந்தப் சிவப்புப் பள்ளிவாசல்கள் நமது முன்னோா்கள் வியாபாரத்துறையில் ஈடுபட்டு இந்த நாட்டுக்கு நன்மையை செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே நமது நாட்டின் ஸ்திரமற்ற பொருளாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நமது உதவிகள் ஒத்தாசைகளை வழங்கல் வேண்டும். நமது நாட்டுக்கு உதவுவதற்கு தற்போதைய ஜனாதிபதி மட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள், யப்பான் சீனா இந்தியா போன்ற பல்வேறு நாடுகளுடன் நாம் பேச்சுவாா்த்தியில் ஈடுபட்டு வருகின்றாா்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சர்வகட்சி ஆட்சிமுறையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிா்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளாா்கள். இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள பொருப்பு இந்த நாட்டினை கட்டியெழுப்வுதாகவே நாம் பாடுபடல் வேண்டும்.
அமைச்சா் விதுரு விக்கிரமநாய்கக அவா்கள் இம்முறை ஹஜ் பிரயாணத்திற்கு இல்ஙகை முஸ்லிம்களுக்கு எவ்வித தடையுமின்றி உதவினாா். இலங்கை அரச செலவில் யாரும் ஹஜ் பயணம் இம்முறை மேற்கொள்ளவில்லை. நானும் ஏனைய பாராளுமன்ற உறுப்பிணா் மர்ஜான் பளீல், அல்ஹம் உவைஸ் இவா்கள் அனைவரும் அவரவா்களது சொந்தச் செலவிலேயே ஹஜ் பயணம் மேற்கொண்டதுடன் அங்குள்ள ஹஜ் நடவடிக்கைகளை கவணிப்பதற்காகவே நாங்கள் சென்றோம். எனவும் நசீர் அஹமட் அங்கு உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment