கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுளுக்கு Call Centre



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொது மக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக Call Centre (அழைப்பு நிலையம்) எனும் விசேட கருமபீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பழைய கட்டிடத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நிலையத்தில் பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் Hotline இலக்கத்திற்கோ அல்லது நேரடியாக வருகைதந்து வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும்.

திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, வடிகான் பராமரிப்பு உட்பட மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும்.

கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,பொது மக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த Call Centre கரும பீடத்தை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொது மக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :