கல்முனை IOC யில் அரசாங்க அறிவுறுத்தலுக்கு அமைய QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்



பாறுக் ஷிஹான்-
ல்முனை IOC எரிபொருள் நிலையத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டன.

கல்முனை திலகா எரிபொருள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய QR Code முறை மூலம் முதல் தடவையாக பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை வாகனங்களின் இறுதி இலக்கங்களுக்கு அமைய கடந்த தினங்களாக எரிபொருளை பெற்றுக் கொள்ளாத பொதுமக்களுக்கும் இன்றைய தினம் எரிபொருள் வழங்கப்பட்டன. இதன் போது மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டரும் முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டரும் சொகுசு கார் வாகனங்களுக்கு 20 லீட்டரும் எரிபொருள் வழங்கப்பட்டது.
அத்துடன் கரப்பிணிகள், மத தலைவர்கள், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் ,நோய் பிணியாளர்களுக்கும் இடையிடையே முன்னுரிமை வழங்கப்பட்டு எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்னும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாக பின்பற்றப் படாமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :